உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / திருவள்ளூர் பாரதிதாசன் பள்ளி மாணவர்கள் சாதனை

திருவள்ளூர் பாரதிதாசன் பள்ளி மாணவர்கள் சாதனை

திருவள்ளூர்: திருவள்ளூர் பாரதிதாசன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 136 மாணவர்கள் தேர்வு எழுதினர். இதில் அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.பள்ளி அளவில் மாணவி கேஷ்னா, 500க்கு, 492 மதிப்பெண்கள் பெற்று முதலிடமும், மாணவியர் தமிழிசை, ஸ்வேதா மற்றும் மாணவன் ஜெயந்த் ஆகிய மூவரும், 490 மதிப்பெண்கள் பெற்று பள்ளி அளவில் இரண்டாமிடமும், மாணவியர் சிரிஷா மற்றும் நித்ய பிரியா ஆகிய இருவரும், 489 மதிப்பெண்கள் பெற்று மூன்றாமிடமும் பிடித்துள்ளனர்.இதுதவிர, கணிதம், அறிவியல், சமூக அறிவியல் ஆகிய பாடங்களில், 36 மாணவர்கள், 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.சாதனை படைத்த மாணவர்களையும், ஆசிரியர்களையும் பள்ளி தாளாளர் உமாசங்கர், தலைமையாசிரியர்கள் மேரி, குமரீஸ்வரி மற்றும் பள்ளி நிர்வாகிகள் பாராட்டி நினைவு பரிசுகள் வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











முக்கிய வீடியோ