உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / ஊறுகாயாக பயன்படும் திருவள்ளூர் ரயில் நிலையம் விரைவு ரயில்கள் புறக்கணிப்பு

ஊறுகாயாக பயன்படும் திருவள்ளூர் ரயில் நிலையம் விரைவு ரயில்கள் புறக்கணிப்பு

திருவள்ளூர்:சென்னை-அரக்கோணம் ரயில்வே மார்க்கத்தில், திருவள்ளூர் ரயில் நிலையம் அமைந்துள்ளது. இவ்வழியாக, கோவை, மேட்டுப்பாளையம், நாகர்கோவில் உள்ளிட்ட தென்,மேற்கு மாவட்டங்கள்; பெங்களூரு, மங்களூரு உள்ளிட்ட பிற மாவட்டங்களுக்கு விரைவு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.திருவள்ளூர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளான காக்களூர், ஸ்ரீபெரும்புதுார் பகுதிகளில் உள்ள தொழிற்பேட்டைகளில் வசிக்கும் வெளிமாநில மற்றும் வெளிமாவட்டத்தினர் ஏராளமாக தங்கி உள்ளனர். இவர்கள் சொந்த ஊருக்குச் செல்லவும், தொழில் நிமித்தமாகவும் ரயிலில் செல்ல, சென்னை சென்ட்ரல் செல்ல வேண்டி உள்ளது.மாவட்ட தலைநகரான திருவள்ளூரில், விரைவு ரயில்கள் நிறுத்திச் செல்ல வேண்டும் என, 40 ஆண்டுகளாக கோரிக்கை விடுத்தும், ரயில்வே நிர்வாகம் செவிசாய்க்கவில்லை. ஆனால், கொரோனா, வெள்ளம் போன்ற காலகட்டத்தில் மட்டும், திருவள்ளூரில் விரைவு ரயில்கள் நிறுத்திச் செல்ல பயன்படுத்துகின்றனர்.இதே போல், தொடர்ந்து, குறிப்பிட்ட 9 ரயில்கள் மட்டும் திருவள்ளூரில் நிறுத்திச் செல்ல வேண்டும் என, ரயில் பயணியர் சங்கத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

திருவள்ளூர் பயணியர் எதிர்பார்க்கும் ரயில்கள்

1.12675/12676-சென்னை-கோவை எக்ஸ்பிரஸ்2. 12639/12640-சென்னை- பெங்களூரு பிருந்தாவன் எக்ஸ்பிரஸ்3.12679/12680 -சென்னை- கோவை இன்டர்சிட்ட எக்ஸ்பிரஸ்4. 12607/12608-சென்னை- பெங்களூரு லால்பாக் எக்ஸ்பிரஸ்5. 12163/12164-சென்னை-லோக்மான்யா திலக் எக்ஸ்பிரஸ்6. 17631/17632-செங்கல்பட்டு- காச்சிகுடா எக்ஸ்பிரஸ்7. 12671/12672-சென்னை- மேட்டுப்பாளையம் நீலகிரி எக்ஸ்பிரஸ்8. 12695/12696-சென்னை-திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ்9. 12685/12686-சென்னை- மங்களூரு எக்ஸ்பிரஸ்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ