உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / கீரப்பாக்கம் கல்குவாரியில் குளித்த கல்லுாரி மாணவர்கள் மூவர் பலி

கீரப்பாக்கம் கல்குவாரியில் குளித்த கல்லுாரி மாணவர்கள் மூவர் பலி

கூடுவாஞ்சேரி:காட்டாங்கொளத்துார் ஒன்றியம், கீரப்பாக்கம் ஊராட்சி பகுதியில் கல்குவாரி குட்டை உள்ளது. இதில் தேங்கியுள்ள தண்ணீரில் குளிக்க, காயார் போலீசார் மற்றும் கீரப்பாக்கம் ஊராட்சி சார்பில் தடை விதிக்கப்பட்டுள்ளது.அங்கு செல்வதற்கான பாதையும் அடைத்து வைக்கப்பட்டுள்ளது. ஆனால், அதையும் மீறி, அங்கு குளிக்க செல்லும் கல்லுாரி மாணவர்கள், குட்டையில் மூழ்கி பலியாவது தொடர்கதையாக உள்ளது.இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை, பொத்தேரில் உள்ள தனியார் பொறியியல் கல்லுாரி மாணவர்கள் ஐந்து பேர், தடையை பொருட்படுத்தாமல் குவாரி குட்டையில் குளித்துள்ளனர்.அப்போது, குட்டையின் ஆழமான பகுதிக்கு சென்ற மூவர், கரை திரும்பவில்லை. இதனால் அதிர்ந்த மற்ற இருவரும், அப்பகுதிவாசிகள் உதவியுடன் காயார் போலீசார் மற்றும் மறைமலை நகர் தீயணைப்பு படையினருக்கு தகவல் அளித்தனர்.விரைந்து வந்த தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர், நேற்று முன்தினம் இரவு, குட்டையில் மூழ்கிய மாணவர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர். நள்ளிரவு வரை தேடிய மீட்பு படையினர், தேடும் பணியை தள்ளிவைத்து நேற்று அதிகாலை மீண்டும் தேட ஆரம்பித்தனர்.மேலும், தேடுதல் பணிக்காக, சென்னையில் இருந்து நீச்சல் வீரர்கள், சிறிய படகு மற்றும் ரப்பர் ரக படகுகள் கொண்டு வரப்பட்டு, தேடுதல் பணி முடுக்கி விடப்பட்டது.அப்போது, தர்மபுரி மாவட்டம், கோபிநாத்பட்டியை சேர்ந்த விஜய்சாரதி, 19, என்ற மாணவரின் உடல், நேற்று காலை மீட்கப்பட்டது.தொடர்ந்து, நேற்று மாலை 4:30 மணிக்கு, திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டையை சேர்ந்த தீபக்சாரதி, 20, தஞ்சாவூர் மாவட்டம், மன்னார்குடியை சேர்ந்த முகமது இஸ்மாயில், 19, ஆகியோரின் உடல்களும் மீட்கப்பட்டன.மீட்கப்பட்ட உடல்களை, பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, காயார் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை