| ADDED : மே 16, 2024 12:53 AM
கடம்பத்துார்:கடம்பத்துார் ஒன்றியம், பேரம்பாக்கம் பேருந்து நிலையத்தில் நேற்று முன்தினம் மாலை தடம் எண் டி.44 அரக்கோணம் செல்லும் பேருந்து நின்று கொண்டிருந்தது. அப்போது பல்சர் பைக்கில் வந்த மூவரில் இருவர் பேருந்தில் ஏறி அங்கு அமர்ந்திருந்த பெண்ணிடம் பேச முயன்றனர். நடத்துனர் அய்யப்பன், 42 என்பவர் இருவரிடம் டிக்கெட் கேட்ட போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றவே நடத்துனரை ஒருவர் தாக்கியுள்ளார். பின் மூவரும் பைக்கில் தப்பினர். இதுகுறித்து அய்யப்பன் கொடுத்த புகாரின்படி மப்பேடு போலீசார் வழக்கு பதிந்து நடத்திய விசாரணையில் பைக்கில் வந்து தகராறில் ஈடுபட்டவர்கள் களாம்பாக்கம் ராகேஷ், 21, இருளஞ்சேரி முகேஷ், 20, பழைய கேசவரம் குணால், 19 ஆகிய மூன்று பேர் என தெரியவந்தது. போலீசார் மூவரையும் கைது செய்து கிளைச்சிறையில் அடைத்தனர்.