உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / பைக் திருடிய மூவருக்கு சிறை

பைக் திருடிய மூவருக்கு சிறை

கடம்பத்துார்:கடம்பத்துார் ஒன்றியம் நுங்கம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் கோகுல்நாத், 30. இவர் கடந்த 3ம் தேதி தன் பேஷன்புரோ இரு சக்கர வாகனத்தை அருகில் உள்ள எறையாமங்கலம் ஏரிக்கரை பகுதியில் நிறுத்தி விட்டு மீன் வாங்க சென்றார். திரும்பி வந்து பார்த்தபோது இரு சக்கர வாகனம் மாயமானது.கோகுல்நாத் கொடுத்த புகாரின்படி மப்பேடு போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வந்தனர். விசாரணையில் இரு சக்கர வாகனத்தை திருடியது மப்பேடு அடுத்த மேட்டுக்கடை பகுதியைச் சேர்ந்த தமிழரசன், 30, ஜெயப்பிரகாஷ், 32, மற்றும் மேமூர் பகுதியைச் சேர்ந்த திருமலை, 26, என தெரிய வந்தது. மூவரையும் நேற்று முன்தினம் கைது செய்த மப்பேடு போலீசார், இரு சக்கர வாகனத்தை மீட்டு மூவரையும் திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சென்னை புழல் சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











புதிய வீடியோ