| ADDED : ஜூன் 03, 2024 04:25 AM
ஆரணி: ஆரணி அடுத்த சின்னம்பேடு கிராமத்தில், சிறுவாபுரி பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது. கோவில் மூலவரின் வலதுபுறம் வள்ளிநங்கை, மணவாள பெருமான் முருகனை கைத்தலம் பற்றும் திருமண காட்சியாய் எழுந்தருளி இருக்கிறார்.மணக்கோலத்தில் காட்சியளிக்கும் முருக பெருமானை மனதார வணங்குபவர்களுக்கு திருமண தடை நீங்கி, மனம்போல் துணை அமையும் என்பது ஐதீகம். இதனால், இக்கோவிலில் நடைபெறும் திருக்கல்யாண உற்சவம் மிகவும் சிறப்பு வாய்ந்தது.மயிலை சிறுவாபுரி பிரார்த்தனை குழுவின், 28ம் ஆண்டு திருக்கல்யாண உற்சவம் நேற்று கோவில் பிரதானத்தில் சிறப்பாக நடந்தது.திருக்கல்யாண நிகழ்வை முன்னிட்டு, காலை 7:30 மணி முதல் வள்ளி, மணவாள பெருமான் உற்சவ மூர்த்திக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடைபெற்றது.தொடர்ந்து, திருக்கல்யாண உற்சவமும், மாங்கல்ய தாரணமும் நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்று வள்ளி, மணவாள பெருமானை வழிபட்டனர்.