உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / மழை பெய்தும் வறண்ட திருத்தணி ஏரிகள்

மழை பெய்தும் வறண்ட திருத்தணி ஏரிகள்

விவசாயிகள் கடும் அதிருப்திதிருத்தணி: திருத்தணி வருவாய் கோட்டத்தில், நீர்வளத்துறையினர் மொத்தம், 79 ஏரிகளை பராமரித்து வருகின்றனர். இந்த ஏரிப்பாசனத்தை நம்பி விவசாயிகள் பல ஆயிரம் ஏக்கர் நிலத்தில் பயிரிடுகின்றனர். மேலும் ஏரியில் தண்ணீர் இருந்தால் ஊராட்சிகளில் குடிநீர் பிரச்னையும் இருக்காது. இந்நிலையில் திருத்தணி நீர்வளத்துறை அதிகாரிகள் அலட்சிய போக்கால் கடந்த ஒரு மாதமாக பெய்து வரும் மழையால், ஏரிகளுக்கு தண்ணீர் செல்லாமல் மழைநீர் வீணாகிறது.இதற்கு காரணம் பெரும்பாலான ஏரிகளின் நீர்வரத்துகால்வாய் ஆக்கிரமிப்பு மற்றும் முட்புதர்கள் வளர்ந்தும் பராமரிப்பு இல்லாததால் மழைநீர் ஏரிக்குள் செல்வதற்கு முடிவதில்லை. இதுதவிர, 60க்கும் மேற்பட்ட ஏரிகளில் ஆக்கிரமித்து விவசாயம் மற்றும் வீடுகள் கட்டியும் உள்ளதால் ஏரிக்கு சுத்தமாக தண்ணீர் வரத்து இல்லை.பருவ மழை நேரத்திலும் கனமழை பெய்தாலும் ஏரிக்கு தண்ணீர் வரத்து இல்லாததால் ஏரிகள் வறண்டு கிடக்கின்றன. ஏரிப்பாசனத்தை நம்பியுள்ள விவசாயிகள், நடப்பாண்டில் பயிரிடுவதற்கு முடியாமல் தவித்து வருகின்றனர். பலமுறை ஏரிப்பாசன விவசாயிகள் நீர்வளத்துறை அதிகாரிகளிடம் ஏரியின் மதகு, கரை மற்றும் நீர்வரத்து கால்வாய்களை சீரமைக்க வேண்டும். மழைநீர் வீணாகாமல் ஏரிக்கு தண்ணீர் கொண்டு வரவேண்டும் என புகார் மனு கொடுத்தும், அதிகாரிகள் மெத்தனமாக செயல்பட்டதால் ஒரு மாதமாக பெய்தும் ஏரியில் தண்ணீரின்றி வறண்டுள்ளன. எனவே மாவட்ட கலெக்டர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை