உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / திருத்தணி ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் ரூ. 1.46 லட்சம் பறிமுதல்

திருத்தணி ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் ரூ. 1.46 லட்சம் பறிமுதல்

திருத்தணி: சென்னை- திருப்பதி தேசிய நெடுஞ்சாலை, அருங்குளம் கூட்டுச் சாலை அருகே திருத்தணி மோட்டார் வாகன ஆய்வாளர் பகுதி அலுவலகம் இயங்கி வருகிறது. இங்கு ஆய்வாளர் பணியிடம் காலியாக உள்ளதால், பொன்னேரி மோட்டார் வாகன அலுவலக மோட்டார் வாகன ஆய்வாளர் ராஜராஜேஸ்வரி வாரத்தில் இரு நாட்கள் வந்து பணி செய்து வருகிறார். இந்நிலையில் அலுவலகத்தில் முறைகேடு மற்றும்அதிகளவில் பணம் பெறுவதாக வந்த புகார் அடிப் படையில், நேற்று மாலை, 4:00 மணியளவில்,திருவள்ளூர் லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி., ராமச்சந்திரமூர்த்தி தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் தமிழ்செல்வி, மாலா மற்றும் போலீசார் அலுவலகத்தில் சோதனை நடத்தினர்.சோதனையில், கணக்கில் வராத, 1.46 லட்சம் ரூபாய் மற்றும் முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. தொடர்ந்து மோட்டார் வாகன ஆய்வாளர் ராஜராஜேஸ்வரி மற்றும் அலுவலக ஊழியர்களிடம் விசாரணை நடத்திவருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை