உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / பராமரிப்பின்றி பூட்டி கிடக்கும் திருத்தணி சுற்றுலா மாளிகை

பராமரிப்பின்றி பூட்டி கிடக்கும் திருத்தணி சுற்றுலா மாளிகை

திருத்தணி: திருத்தணி தாசில்தார் அலுவலகம் அருகே, கடந்த, 15 ஆண்டுகளுக்கு முன் ஒன்றரை கோடி ரூபாய் மதிப்பில், பொதுப்பணித்துறையினர், சுற்றுலா மாளிகை கட்டடம் புதிதாக கட்டி பயன்பாட்டிற்கு விடப் பட்டது. இங்கு நான்கு நவீன அறைகள் மற்றும் உணவு அருந்தும் கூடம் மற்றும் குளியல் அறைகளுடன் ஏற்படுத்தப்பட்டது. அனைத்து அறைகளும் குளிர்சாதன வசதி பொருத்தப்பட்டுள்ளது.இந்த சுற்றுலா மாளிகையில் தமிழக அரசு உயர் அதிகாரிகள், அமைச்சர்கள் மற்றும் மத்திய, மாநில அரசு அதிகாரிகள் தங்கி ஆய்வு பணிகள் மேற்கொள்வதற்கு ஏற்படுத்தப்பட்டது. இந்நிலையில் பொதுப்பணித்துறையினர் முறையாக சுற்றுலா மாளிகையை பராமரிக்காததால் கடந்த பல ஆண்டுகளாக அறைகள் மற்றும் உட்புறத்தில் தரைதளம் தரை இறங்கியது. மேலும் அறைகளின் சுவர்கள் சேதம் அடைந்தும், கட்டடம் இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளது.கட்டடம் பழுதடைந்ததால் சில ஆண்டுகளாக அரசு அதிகாரிகள் சுற்றுலா மாளிகை வந்து தங்குவதில்லை. இதனால் மேலும் கட்டடம் பராமரிப்பின்றி வீணாக பூட்டியே கிடக்கிறது. இந்த பழுதடைந்த கட்டடத்திற்கு, பொதுப்பணித்துறையினர் பகல் மற்றும் இரவு நேரங்களில் சுழற்சி முறையில் இரு ஊழியர்கள் பாதுகாப்பு பணியில் உள்ளனர். எனவே பழுதடைந்த சுற்றுலா மாளிகையை சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ