உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / ஓவர் லோடு சாம்பல் கழிவு லாரிகளால் மீஞ்சூரில் வியாபாரிகள் தவிப்பு

ஓவர் லோடு சாம்பல் கழிவு லாரிகளால் மீஞ்சூரில் வியாபாரிகள் தவிப்பு

மீஞ்சூர்:மீஞ்சூர் அடுத்த அத்திப்பட்டு புதுநகரில் வடசென்னை அனல்மின் நிலையம் நிலை ஒன்று, இரண்டு ஆகியவற்றில், 1,830 மெகாவாட், இம்மாதம், துவங்கப்பட்ட வடசென்னை 3 அனல்மின் நிலையத்தில், 800 மெகாவாட் மின்சாரமும் உற்பத்தி செய்யப்படுகிறது. மின்உற்பத்திக்காக நிலக்கரி பயன்படுத்தப்பட்டு, அதிலிருந்து வெளியேறும் சாம்பல் கழிவுகள், 8 கி.மீ., தொலைவில் செப்பாக்கம் கிராமத்தில் குவித்து வைக்கப்படுகிறது. பின் அவை, சாலை பணிகளுக்கும், சிமென்ட் தொழிற்சாலைகளுக்கும் லாரிகளில் கொண்டு செல்லப்படுகிறது. டிப்பர் லாரிகளில் அதிக சுமையுடன் இவை கொண்டு செல்லப்படும்போது, மீஞ்சூர் பஜார் பகுதியில் சாலை முழுதும் சிதறுகிறது.அவற்றின் மீது மற்ற வாகனங்கள் பயணிக்கும்போது புழுதியாக மாறுகிறது. மீஞ்சூர் பஜார் பகுதியில் அதிகளவில் சாம்பல் கழிவுகள் சிதறி, புழுதியாக பறப்பதால் வியபாரிகள் பெரும் தவிப்பிற்கு ஆளாகின்றனர்.கடைகளில் உணவுப்பொருட்கள், துணிகளில் படிந்து விற்பனை பொருட்கள் வீணாகின்றன. சாலையோர கடைகளில் உள்ள காய்கறி, பழங்களில் இவை படிகின்றன. இருசக்கர வாகனங்களில் பயணிப்பவர்களும் சாம்பல் கழிவுகளால் கண் எரிச்சல், மூச்சுத்திணறல் உள்ளிட்டவற்றுக்கு ஆளாவதுடன், தடுமாற்றமான பயணம் மேற்கொள்கின்றனர்.சாம்பல் கழிவுகளைக் கொண்டு செல்லும் லாரிகளை கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வியாபாரிகள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை