| ADDED : ஜூலை 19, 2024 01:39 AM
திருவள்ளூர்,திருவள்ளூர் ரயில் நிலையத்தில் இருந்து தினமும் ஒரு லட்சம் பேர், சென்னை, அரக்கோணத்திற்கு பயணம் செய்கின்றனர்.சென்னை சென்ட்ரல், கடற்கரையில் இருந்து திருவள்ளூர் வழியாக அரக்கோணம், திருத்தணிக்கு, தினமும் 450க்கும் மேற்பட்ட புறநகர் மின்சார ரயில்களும், 10 விரைவு ரயில்களும் திருவள்ளூரில் நின்று செல்கின்றன.ரயில்களில் பயணம் செய்ய வரும் இருசக்கர வாகன ஓட்டிகள், தங்கள் வாகனங்களை பயணியர் செல்லும் வழியிலும், சுரங்கப்பாதையை ஒட்டியும் நிறுத்திச் செல்கின்றனர்.இதனால், ரயில் நிலையத்திற்கு சென்று வரும் பயணியரும், சுரங்கப்பாதையை பயன்படுத்துவோரும், கடும் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.எனவே, ரயில்வே போலீசார் ரயில் நிலைய நுழைவாயில் மற்றும் சுரங்கப்பாதையை மறித்து வாகனங்கள் நிறுத்துவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பயணியர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.