உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / டூ - வீலர் திருடிய சிறுவன் கைது

டூ - வீலர் திருடிய சிறுவன் கைது

திருத்தணி: திருத்தணி அடுத்த கே.ஜி.கண்டிகை பகுதியில் திருத்தணி குற்றப்பிரிவு எஸ்,.ஐ., ரவி மற்றும் போலீசார் வாகன தணிக்கை நடத்தினர். அப்போது பதிவெண் இல்லாத இரு சக்கர வாகனத்தில் வந்த சிறுவனை போலீசார் சந்தேகத்தின் பேரில் நிறுத்தி விசாரணை நடத்தினர். சிறுவன் ஓட்டி வந்த இரு சக்கர வாகனம் திருடி வந்தது தெரிய வந்தது. தொடர்ந்து சிறுவனை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தியதில், திருத்தணி ஒன்றியம் வி.சி.ஆர்.கண்டிகை சேர்ந்த, 17 வயது சிறுவன் என்றும், ஏழாம் வகுப்பு வரை படித்துவிட்டு, குடிபழக்கத்திற்கு அடிமையாகியதும் தெரிய வந்தது. சிறுவனை கைது செய்து திருவள்ளூர் சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் சேர்த்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி