உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / வாலிபருக்கு கொலை மிரட்டல் இருவருக்கு சிறை

வாலிபருக்கு கொலை மிரட்டல் இருவருக்கு சிறை

கடம்பத்துார்:திருவண்ணாமலை மாட்டம் சேஷமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் ரஞ்சித்குமார், 31.இவர் திருவள்ளூர் - ஸ்ரீபெரும்புதுார் நெடுஞ்சாலையில் உள்ள போளிவாக்கம் பகுதியில் ஹோட்டலில் பணிபுரிந்து வருகிறார். கடந்த 25ம் தேதி இரவு இங்கு வந்த இருவர் சாப்பிட்டு விட்டு பணம் கொடுக்க மறுத்து தகராறில் ஈடுபட்டனர். பின் ரஞ்சித்குமாரை ஆபாசமாக பேசி தாக்கி 500 ரூபாயை பறித்து கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்தனர். இதுகுறித்து ரஞ்சித்குமார் கொடுத்த புகாரின்படி மணவாள நகர் போலீசார் நடத்திய விசாரணையில் மிரட்டி பணம் பறித்தது சென்னை ஆயிரம் விளக்கு பகுதியைச் சேர்ந்த சந்தோஷ்குமார், 26 மற்றும் புளியந்தோப்பைச் சேர்ந்த அபிமன்யூ, 26 என தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் இருவரையும் கைது செய்து திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சென்னை புழல் சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











சமீபத்திய செய்தி