உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / டூ - வீலர் மோதி வாலிபர் பலி

டூ - வீலர் மோதி வாலிபர் பலி

திருத்தணி: திருத்தணி சித்தூர் சாலை வள்ளி நகரில் வசித்து வந்தவர் பாபு, 29. இவர் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வந்தார். நேற்று முன்தினம் இரவு பாபு தனது இரு சக்கர வாகனத்தில் பைபாஸ் ரவுண்டனாவுக்கு வந்து அங்குள்ள மெடிக்கல் ஷாப்பில் மாத்திரைகள் வாங்கிக் கொண்டு வீட்டிற்கு திரும்பி சென்றுக் கொண்டிருந்தார். அப்போது, செங்குந்தர் நகர் பகுதியில் வந்த போது எதிரே திருத்தணி குமரன் நகர் சேர்ந்த விக்னேஷ் அதிவேகமாக இரு சக்கர வாகனத்தை ஓட்டி வந்து, பாபுவின் இரு சக்கர வாகனத்தின் மீது மோதினார். இதில் வாகனத்துடன் சாலையில் விழுந்த பாபுவின் மீது அவ்வழியாக வந்த லாரி ஓட்டுனர் கட்டுப்பாட்டை இழந்து, பாபுவின் மீது ஏறியது. இதில் பாபு சம்பவ இடத்திலேயே இறந்தார். விக்னேஷ் பலத்த காயம் அடைந்தார். அவ்வழியாக சென்றவர்கள் விக்னேைஷ மீட்டு திருத்தணி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். திருத்தணி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ