உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / மெதுாரில் பராமரிப்பில்லாத பேருந்து நிறுத்த நிழற்குடை

மெதுாரில் பராமரிப்பில்லாத பேருந்து நிறுத்த நிழற்குடை

பொன்னேரி: பொன்னேரி அடுத்த மெதுார் பாரதி நகர் பகுதியில், அரசு மேல்நிலைப்பள்ளியில், 400க்கும் அதிகமான மாணவர்கள் படிக்கின்றனர். இவர்கள் சுற்று வட்டார கிராமங்களில் இருந்து, அரசு பேருந்துகளில் பள்ளிக்கு வந்து செல்கின்றனர். பள்ளி நுழைவாயில் பகுதியில் மாணவர்களுக்காக பேருந்து நிறுத்தம் மற்றும் நிழற்குடை உள்ளது. இந்த நிழற்குடை உரிய பராமரிப்பு இன்றி கிடக்கிறது.இருக்கைகள் சேதம் அடைந்து, சிமென்ட் பூச்சுக்கள் பெயர்ந்து உள்ளன. ஆங்காங்கே கரையான் புற்றுகளும் உள்ளன. இரவு நேரங்களில் நிழற்குடை வளாகத்தில் பாம்புகள் உலா வருகின்றன. இன்று முதல் பள்ளிகள் செயல்பட உள்ள நிலையில், பேருந்து நிழற்குடை பராமரிப்பு இன்றி, பாழடைந்து கிடப்பதால், மாணவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாக இருக்கிறது.பொன்னேரி - பழவேற்காடு மாநில நெடுஞ்சாலையில் உள்ள இந்த நிழற்குடையை சீரமைப்பதில் ஒன்றிய நிர்வாகம் கவனம் செலுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை