உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / உத்தண்டிகண்டிகை - அனுப்பம்பட்டு சாலை கரடு முரடு வாகன ஓட்டிகள் தடுமாற்ற பயணம்

உத்தண்டிகண்டிகை - அனுப்பம்பட்டு சாலை கரடு முரடு வாகன ஓட்டிகள் தடுமாற்ற பயணம்

பொன்னேரி,பொன்னேரி அடுத்த, உத்தண்டிகண்டிகை கிராமத்தில் இருந்து, அனுப்பம்பட்டு செல்லும் ஒன்றிய சாலை போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் இருக்கிறது. சாலை முழுதும் சரளை கற்கள் பெயர்ந்தும், பள்ளங்கள் ஏற்பட்டும் உள்ளன. மழைக்காலங்களில், பள்ளங்களில் மழைநீர் தேங்குகிறது.உத்தண்டிகண்டிகை, ஆத்ரேயமங்கலம், புலிக்குளம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்தவர்கள் அனுப்பம்பட்டு செல்ல இந்த சாலை வழியாக பயணிக்கின்றனர்.சாலை கரடு முரடாக இருப்பதால், தடுமாற்றத்துடன் சென்று வருகின்றனர். இரவு நேரங்களில் சென்று வரும்போது, பள்ளங்களில் சிக்கி, சிறு விபத்துக்களுக்கு உள்ளாகின்றனர்.இது குறித்து கிராமவாசிகள் கூறியதாவது:கிராமங்களில் இருந்து, ஏராளமானோர் அனுப்பம்பட்டு ரயில் நிலையம் சென்று, அங்கிருந்து புறநகர் ரயில்களில், சென்னை, கும்மிடிப்பூண்டி பகுதிகளுக்கு கல்வி, சுகாதாரம், தொழில் உள்ளிட்ட பல்வேறு அத்தியாவசிய பணிகளுக்கு சென்று வருகின்றனர்.இந்த சாலை, 10 ஆண்டுகளாக சீரமைக்கப்படாமல் இருக்கிறது. இருசக்கர வாகனங்கள் தடுமாற்றத்துடன் செல்கின்றன. குறித்த நேரத்தில் புறநகர் ரயில்களை பிடிக்க முடியாத சூழல் ஏற்படுகிறது.கார், பள்ளி வேன்கள் இந்த சாலையில் பயணிக்க முடியாத நிலையில், எலவம்பேடு, மேட்டுப்பாளையம் வழியாக, 3 கி.மீ., சுற்றி செல்கின்றன.கிராமவாசிகளின் சிரமம் கருதி, மேற்கண்ட சாலையை புதுப்பிக்க மீஞ்சூர் ஒன்றிய நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள்கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி