உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / அடிக்கடி இடமாறும் வி.ஏ.ஓ., அலுவலகம்

அடிக்கடி இடமாறும் வி.ஏ.ஓ., அலுவலகம்

திருவாலங்காடு:திருவாலங்காடு கிராமத்தில் 15,000க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இப்பகுதிவாசிகள் வருவாய், பட்டா மாறுதல் உள்ளிட்ட சான்றிதழ்களை பெற வி.ஏ.ஓ., அலுவலகத்திற்கு செல்ல வேண்டி உள்ளது.இந்நிலையில், ஊராட்சி அலுவலகம் அருகே இருந்த வி.ஏ.ஓ., அலுவலகம் பழுதடைந்த காரணத்தால் இடித்து அகற்றப்பட்டது.அதன்பின், ஆர்.ஐ., அலுவலகம், இ-- - சேவை மையம் என, அவ்வப்போது வி.ஏ.ஓ., அலுவலகம் தற்காலிகமாக இயங்கி வருகிறது.இதனால், சான்றிதழ்களை பெற வருவோர், வி.ஏ.ஓ., அலுவலகம் எங்கே இருக்கிறது என, தெரியாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.எனவே, ஊராட்சி அலுவலகம் அருகே வி.ஏ.ஓ., அலுவலகத்திற்கு புதிய கட்டடம் கட்ட சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி