| ADDED : ஜூலை 23, 2024 01:01 AM
பொன்னேரிகும்மிடிப்பூண்டி அடுத்த கண்ணம்பாக்கம் கிராமத்தை சேர்ந்த கிராமவாசிகள் இலவச வீட்டு மனை பட்டா கேட்டு, நேற்று பொன்னேரி சப்-கலெக்டர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சப்-கலெக்டர் வாகே சங்கேத் பல்வந்த், அழைத்து பேச்சு நடத்தினார். அவரிடம் பல ஆண்டுகளாக இலவச வீட்டுமனை பட்டா கேட்டு, மனு அளித்தும் நடவடிக்கை இல்லை என, கிராமவாசிகள் முறையிட்டனர். இலவச வீட்டுமனை பட்டா தொடர்பான கோரிக்கை மனுவையும் அளித்தனர்.மனுவில் 'கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர், பொன்னேரி ஆர்.டி.ஓ., மாவட்ட கலெக்டர் என தொடர்ந்து மனு அளித்தும் நடவடிக்கை இல்லை. தற்போது ஒரே வீட்டில், மூன்று தம்பதியர் வசிக்கும் நிலை உள்ளது. மழைக்காலங்களில் சேதம் அடைந்த வீடுகளில் தங்க முடியாமல், அரசு கட்டடங்களில் தஞ்சமடைய வேண்டி உள்ளது. எனவே, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என கூறப்பட்டிருந்தது.வருவாய்த்துறை அதிகாரிகளை நேரில் அனுப்பி, கணக்கெடுப்புநடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக சப் - கலெக்டர் உறுதியளித்தார். அதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.