உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / ஆறுவழி சாலையில் கிராமவாசிகள் போராட்டம்

ஆறுவழி சாலையில் கிராமவாசிகள் போராட்டம்

பள்ளிப்பட்டு: திருவள்ளூர் மாவட்டம், தச்சூர் முதல் ஆந்திர மாநிலம் சித்துார் வரை ஆறு வழி சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதில், பள்ளிப்பட்டு ஒனறியம், கீழப்பூடி, மேலப்பூடி, பெருமாநல்லுார் வழியாக அமைக்கப்பட்டு வரும் சாலையில், அந்த பகுதிவாசிகள் தங்கள் பகுதியில் பாலம் அமைக்க வேண்டும். பாலம் இருந்தால் மட்டுமே தங்களால் ஊருக்குள் செல்ல முடியும் என வலியுறுத்தி ஆறுவழி சாலை பணியை தடுத்து நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். சம்பவ இடத்திற்கு வந்த வருவாய் துறையினர் மற்றும் பொதட்டூர்பேட்டை போலீசார், பகுதிவாசிகளிடம் சமரசம் பேசினர். உரிய நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதி அளித்ததை தொடர்ந்து பகுதிவாசிகள் கலைந்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை