உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / துணை ராணுவம் திருத்தணி வருகை

துணை ராணுவம் திருத்தணி வருகை

திருத்தணி: அரக்கோணம் லோக்சபா தேர்தல், இம்மாதம், 19 ம் தேதி நடைபெறுகிறது. தி.மு.க., வேட்பாளர் எஸ்.ஜெகத்ரட்சகன், அ.தி.மு.க., வேட்பாளர் ஏ.எல். விஜயன், பா.ம.க., வேட்பாளர் வழக்கறிஞர் பாலு உள்பட, 26 பேர் போட்டியிடுகின்றனர். தேர்தல் பாதுகாப்பு பணிக்காக துணை ராணுவ வீரர்கள் திருத்தணி சட்டசபை தொகுதிக்கு நேற்று வருகை தந்தனர். மகாராஷ்டிரா மாநிலம் புனே பகுதியில் இருந்து ஒரு டி.எஸ்.பி., ஒரு இன்ஸ்பெக்டர், இரண்டு எஸ்.ஐ., க்கள் 118 ராணுவ வீரர்கள் என மொத்தம், 122 பேர் வந்தனர். ராணுவ வீரர்களை திருத்தணி டி.எஸ்.பி., விக்னேஷ்தமிழ்மாறன், இன்ஸ்பெக்டர் மதியரசன், எஸ்.ஐ., ராக்கிகுமாரி வரவேற்றனர்.அக்கைய்யநாயுடு சாலையில் உள்ள போலீஸ் அடுக்குமாடி குடியிருப்பில் தங்க வைக்கப்பட்டனர்.ராணுவ வீரர்கள், உள்ளூர் போலீசாருடன் இணைந்து சட்டசபை தொகுதி முழுதும் அணிவகுப்பு நடத்துகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ