உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / ஒருவாரமாக குடிநீர் தட்டுப்பாடு பி.டி.ஓ., அலுவலகம் முற்றுகை

ஒருவாரமாக குடிநீர் தட்டுப்பாடு பி.டி.ஓ., அலுவலகம் முற்றுகை

திருவாலங்காடு:திருவாலங்காடு ஊராட்சி பெரிய தெருவில் 150க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்த 800க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதிவாசிகளுக்கு ஊராட்சி நிர்வாகம் சார்பில் குழாய் வாயிலாக குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இந்நிலையில் கடந்த ஒருவாரமாக குடிநீர் வினியோகம் இன்றி உள்ளது. இதுகுறித்து ஊராட்சி நிர்வாகம் மற்றும் பி.டி.ஓ., அலுவலகத்தில் தொடர்ந்து கோரிக்கை வைத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பெண்கள் 30க்கும் மேற்பட்டோர் காலிக்குடங்களுடன் பி.டி.ஓ., அலுவலகத்தை நேற்று காலை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.இதுகுறித்து அப்பகுதிவாசிகள் கூறியதாவது :குடிநீரின்றி ஒருவாரமாக கேன் வாட்டரை 30 ரூபாய் கொடுத்து வாங்குகிறோம். அதிகாரிகளிடம் கூறியும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. மெத்தனமாக செயல்படுகின்றனர். இன்று அலுவலகம் முற்றுகையிட்ட பின் மோட்டர் பழுதடைந்துள்ளது. சீரமைத்து வருவதாக தெரிவிக்கின்றனர். அத்தியாவசியதேவையான குடிநீர் கூட போராடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது வேதனையளிக்கிறது.இவ்வாறு கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











சமீபத்திய செய்தி