உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / நடுவில் கொஞ்சம் சாலையை காணோம் மருதவல்லிபுரம் மக்கள் குமுறல்

நடுவில் கொஞ்சம் சாலையை காணோம் மருதவல்லிபுரம் மக்கள் குமுறல்

திருவாலங்காடு:திருவாலங்காடு ஒன்றியம், தொழுதாவூர் ஊராட்சிக்கு உட்பட்டது மருதவல்லிபுரம் கிராமம். இங்கு 1,500க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். மருதவல்லிபுரம்-- -மணவூர் தார்ச்சாலை, 15 ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்டது. இச்சாலை, 3 ஆண்டுகளாக சேதமடைந்து இருந்தது. எனவே இந்த தார்ச்சாலையை சீரமைக்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து கிராமசாலைகள் மேம்படுத்துதல் திட்டத்தின் கீழ் 2 கி.மீ., நீளத்திற்கு 1 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பில் தார்ச்சாலை அமைக்க ஒப்பந்தம் கோரப்பட்டு பணி துவங்கி இரண்டு மாதங்களுக்கு முன் தார்ச்சாலை அமைக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வந்தது. இந்நிலையில் மருதவல்லிபுரம் தாமரை குட்டை அருகே தார்ச்சாலை 20 மீட்டர் நீளத்திற்கு அமைக்கப்படாமல் விடப்பட்டு உள்ளது. இதனால் நடுவில் கொஞ்சம் சாலையை காணோம் என பகுதிவாசிகள் குமுறுகின்றனர்.திருவள்ளூர் கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பகுதிவாசிகள் வலியுறுத்தியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி