உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / பழுதான மின்விளக்குகளை பராமரிப்பது யார்? இரு துறை போட்டியால் பழவேற்காடில் அவதி

பழுதான மின்விளக்குகளை பராமரிப்பது யார்? இரு துறை போட்டியால் பழவேற்காடில் அவதி

பழவேற்காடு:பழவேற்காடு ஏரியின் குறுக்கே, கடந்த, 2010ல் உயர்மட்ட பாலம் அமைக்கப்பட்டு, இருபுறமும், 20க்கும் மேற்பட்ட மின்கம்பங்களில் மின்விளக்குகள் பொருத்தப்பட்டன.இந்த பாலம் நெடுஞ்சாலைத்துறையின் கட்டுப்பாட்டிலும், பழவேற்காடு மற்றும் லைட்அவுஸ் குப்பம் ஆகிய ஊராட்சிகளின் எல்லையிலும் அமைந்து உள்ளது.பாலத்தில் இருந்த மின்விளக்குகள் ஒவ்வொன்றாக பழுதாகின. மின்கம்பங்களும் ஒவ்வொன்றாக துருப்பிடித்து உடைந்தன.தற்போது, பாலத்தில் உள்ள அனைத்து மின்விளக்குகளும் சேதம் அடைந்து, இரவு நேரங்களில் இருண்டு கிடக்கிறது.பழவேற்காடு கடற்கரை பகுதியை ஒட்டி உள்ள, 10க்கும் மேற்பட்ட மீனவ கிராமத்தின் இந்த பாலத்தின் வழியாகவே பழவேற்காடு பஜார் பகுதிக்கு வந்து செல்ல வேண்டும்.மாலை மற்றும் நேரங்களில் பாலம் இருண்டு கிடப்பதால் மீனவ மக்கள் சிரமத்திற்கு ஆளாகின்றனர். பாலம் நெடுஞ்சாலைத்துறையின் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும், அவர்கள்தான் பராமரிக்க வேண்டும் என ஊராட்சி நிர்வாகம் தெரிவித்து ஒதுங்குகிறது.நெடுஞ்சாலைத்துறையினரோ, ஊராட்சி நிர்வாகம் தான் தெருவிளக்குகளை பராமரிக்க வேண்டும் என தெரிவிக்கின்றனர்.பாலத்தில் உள்ள மின்விளக்குகளை யார் பராமரிப்பு என்பதில் ஏற்பட்டுள்ள போட்டியில், யாரும் கண்டுகொள்ளாமல் இருக்கின்றனர். இதனால் மீனவ கிராங்களை சேர்நதவர் பெரிதும் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவ கிராம மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை