உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / ஸ்கூட்டரில் டிப்பர் லாரி மோதி கணவர் கண்முன் மனைவி பலி..

ஸ்கூட்டரில் டிப்பர் லாரி மோதி கணவர் கண்முன் மனைவி பலி..

மறைமலை நகர்: சென்னை, பல்லாவரம் பகுதியைச் சேர்ந்தவர் சங்கரன், 50. இவரது மனைவி உமா மகேஸ்வரி, 45.இருவரும், நேற்று முன்தினம் இரவு, அச்சிறுபாக்கம் பகுதியில் உள்ள அம்மன் கோவிலுக்கு, 'யமாஹா ரே' ஸ்கூட்டரில் சென்றனர்.ஜி.எஸ்.டி., சாலையில், சிங்கபெருமாள் கோவில் அருகே சென்று கொண்டிருந்த போது, பின்னால் வந்த,'அசோக் லேலண்ட்' டிப்பர் லாரி, இவர்களது ஸ்கூட்டரின் பின்புறத்தில் மோதியது. இதில், உமா மகேஸ்வரி படுகாயமடைந்து, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சங்கரன், சிறு காயங்களுடன் தப்பினார்.தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மறைமலை நகர் போக்குவரத்து போலீசார், உமா மகேஸ்வரி உடலை மீட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு, பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.தாம்பரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ