மேலும் செய்திகள்
சுத்தமான குடிநீர் வழங்க முடியாத அரசு
4 hour(s) ago
100 நாள் வேலைக்கு கட்டிங் :கலெக்டர் அலுவலகத்தில் மனு
5 hour(s) ago
பவானியம்மன் கோவிலில் குவிந்த பக்தர்கள்
29-Dec-2025
திருவள்ளூர் : திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் தவறான சிகிச்சையால், தன் கணவரின் உடல் செயலிழப்பு ஏற்பட்டதாக கூறிய மனைவி, குழந்தைகளுடன் கண்ணீர் மல்க புகார் அளித்தார்.திருவள்ளூர் மாவட்டம், ஈக்காடு கிராமத்தைச் சேர்ந்த சாவித்திரி என்பவர், மனநலம் குன்றிய மகனுடன் கலெக்டரிடம் அளித்துள்ள மனு:என் கணவர் கந்தன்குமார், 51; கூலித்தொழிலாளி. எங்களுக்கு மாற்றுத்திறனாளி ஒருவர் உள்ளிட்ட இரண்டு மகன்கள் உள்ளனர். என் கணவருக்கு வயிற்று வலி காரணமாக, திருவள்ளூர் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில், கடந்த மார்ச் 10ல் சேர்த்தோம். மருத்துவர்கள் பரிந்துரையின்படி, மார்ச் 23ல் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. மருத்துவர்களின் கவனக்குறைவால், என் கணவரின் முதுகில், 8 செ.மீ., அளவிற்கு நுால் அறுந்து விட்டதால், கால் வீக்கம் அடைந்தது. இதையடுத்து, சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு, அறுவை சிகிச்சை செய்து, நுாலை அகற்றினர்.இருப்பினும், என் கணவருக்கு இடுப்பிற்கு கீழ் இரண்டு கால் உள்ளிட்ட அனைத்து உறுப்புகளும் செயலிழந்து விட்டன. இதற்கு காரணமான மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுத்து, எங்கள் குடும்ப வறுமையை கருத்தில் கொண்டு, தமிழக அரசு நிதியுதவி அளிக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.மனுவை பெற்ற கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.
4 hour(s) ago
5 hour(s) ago
29-Dec-2025