உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / மீண்டும் வடிகால் ஆக்கிரமிப்பு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பரா?

மீண்டும் வடிகால் ஆக்கிரமிப்பு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பரா?

ஆவடி:ஆவடி செக் போஸ்ட், சென்னை --- திருத்தணி தேசிய நெடுஞ்சாலையில், 'எஸ்.பி.டிரேடர்ஸ்' என்ற பெயரில், பழைய மரக்கழிவுகளை விற்கும் கடை உள்ளது. இந்த தனியார் கடை, மழைநீர் வடிகாலை ஆக்கிரமித்து, வியாபாரம் சார்ந்த பொருட்களை அடுக்கி வைத்துள்ளது. இதனால், வடிகால் மாயமாகி, எங்கே இருக்கிறது என, தெரியாத நிலை உருவாகி வருகிறது. மழைநீர் வடிகாலில் அடைப்பு ஏற்பட்டால், அவற்றை சரிசெய்ய கூட முடியாதபடி, பொருட்கள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து பலமுறை நம் நாளிதழில் செய்தி வெளியானது.இதன் எதிரொலியாக, ஒவ்வொரு முறையும் ஆவடி மாநகராட்சி அதிகாரிகள் மேற்கூறிய கடை மீது நடவடிக்கை எடுத்து வருகின்றனர். தற்போது, மீண்டும் மழைநீர் வடிகால் மீது பொருட்கள் வைக்கப்பட்டுள்ளது.எனவே, சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்து, ஆக்கிரமிப்பை அகற்றி அபராதம் விதிக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ