உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / காக்களூர் ஏரிக்கரை நடைபாதை சேதம் சீரமைக்க பொ.ப.துறை முன்வருமா?

காக்களூர் ஏரிக்கரை நடைபாதை சேதம் சீரமைக்க பொ.ப.துறை முன்வருமா?

காக்களூர்:காக்களூர் ஏரிக்கரையில் அமைக்கப்பட்ட நடைபயிற்சி பாதை சேதமடைந்துள்ளதால், நடைபயிற்சியாளர்கள் அவதிப்படுகின்றனர்.திருவள்ளூர் ஒன்றியம், காக்களூர் ஊராட்சிக்கு உட்பட்டது, காக்களூர் பெரிய ஏரி. காக்களூரில் இருந்து திருவள்ளூர் நகருக்கு செல்லும் வகையில், இந்த ஏரி அமைந்துள்ளது.நூறு ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த ஏரிக்கரை, 10 ஆண்டுகளுக்கு முன், 1 கோடி ரூபாய் மதிப்பில் சீரமைக்கப்பட்டு, நடைபயிற்சி மேற்கொள்ள நடைபாதை, பொதுமக்கள் அமர இருக்கை அமைக்கப்பட்டது.தற்போது, ஏரிக்கரையில் முட்செடிகள் வளர்ந்து, நடைபயிற்சி செல்லும் பாதை சேதமடைந்து உள்ளது.இதுகுறித்து, காக்களூரைச் சேர்ந்த நடைபயிற்சியாளர்கள் கூறியதாவது:காக்களூர் ஏரிக்கரை முழுதும், முள்செடி, காட்டுச் செடிகள் வளர்ந்துள்ளதால், நடைபயிற்சி பாதை தடைபட்டுள்ளது.இதனால், பயிற்சியாளர்கள் ஆபத்தான முறையில் சாலையில் நடக்க வேண்டி உள்ளது. மேலும், நடைபாதையும் ஆங்காங்கே சேதமடைந்துள்ளது. இதை பொதுப்பணித் துறையினர் சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ