உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / பாம்பு கடித்து பெண் பலி

பாம்பு கடித்து பெண் பலி

சித்தாமூர்:சித்தாமூர் அருகே காவாதுார் கிராமம், அம்பேத்கர் தெருவை சேர்ந்தவர் சுசீலா, 37. முருகம்பாக்கம் அரசு ஆரம்ப பள்ளியில், சத்துணவு சமையலராக வேலை செய்து வந்தார்.கடந்த 27ம் தேதி மதியம் 2:00 மணிக்கு, வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்தபோது, வீட்டிற்குள் பதுங்கியிருந்த நல்ல பாம்பு சுசீலாவின் வலது கையில் தீண்டியது.அதனால் மயங்கிய அவரை, உறவினர்கள் உடனே மீட்டு, மதுராந்தகம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு முதலுதவி அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.அங்கு சிகிச்சை பெற்று வந்த சுசீலா, நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சித்தாமூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











முக்கிய வீடியோ