உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / மின்னல் தாக்கி தொழிலாளி பலி

மின்னல் தாக்கி தொழிலாளி பலி

கும்மிடிப்பூண்டி:ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர் லோகேஷ்வர் ராணா, 60. கவரைப்பேட்டை அடுத்த புதுவாயல் பகுதியில் உள்ள தனியார் செங்கல் சூளையில் வேலை பார்த்து வந்தார்.நேற்று முன்தினம் மாலை அப்பகுதியில் பலத்த இடியுடன் மழை பெய்தது. அப்போது, வேலையில் இருந்த அவர் மீது மின்னல் தாக்கி சுருண்டு விழுந்தார்.ஆபத்தான நிலையில் மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். கவரைப்பேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ