உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / 10 வயது சிறுமி உயிரிழப்பு

10 வயது சிறுமி உயிரிழப்பு

ஆர்.கே.பேட்டை:ஆர்.கே.பேட்டை அடுத்த மஞ்சூர் கண்டிகையைச் சேர்ந்தவர் சரவணன் மகள் தியா, 10. இவர், அஸ்வரேவந்தாபுரம் அரசு உயர்நிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வந்தார்.நேற்று முன்தினம் இரவு வீட்டில் துாங்கி கொண்டிருந்தவருக்கு திடீரென மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டது. சற்று நேரத்தில் வாந்தியும் எடுத்துள்ளார். அவரது தாய், சோளிங்கர் அரசு மருத்துவமனையில் தியாவை சேர்த்தார்.அதன்பின், வீடு திரும்பிய ஒரு மணி நேரத்தில் மீண்டும் தியாவின் உடல்நிலை பாதிக்கப்பட்டது. மீண்டும் சோளிங்கர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.மேல் சிகிச்சைக்காக வேலுார் அடுக்கம்பாறை அரசு மருத்துமனைக்கு ஆம்புலன்சில் கொண்டு செல்லப்பட்டார். ஆனால், வழியிலேயே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து ஆர்.கே.பேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை