200 கிலோ பிளாஸ்டிக் பறிமுதல்
திருத்தணி: திருத்தணி பகுதி கடைகளில் நகராட்சி ஊழியர்கள் நடத்திய சோதனையில், 200 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. திருத்தணி நகராட்சியில் ஹோட்டல்கள், பழக்கடைள், காய்கறி மார்க்கெட் மற்றும் பூ கடைகள் ஏராளமாக உள்ளன. இந்த கடைகளில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் கவர் பயன்பாடு அதிகளவில் இருந்தது. கலெக்டர் பிரதாப் உத்தரவுபடி, நேற்று திருத்தணி நகராட்சி துப்புரவு ஆய்வாளர் ரவிச்சந்திரன் மற்றும் அலுவலக ஊழியர்கள், 10 பேர் கொண்ட குழுவினர், ம.பொ.சி.சாலை, அரக்கோணம் சாலை மற்றும் அக்கைய்யநாயுடு சாலை ஆகிய பகுதிகளில் உள்ள கடைகளில் தி டீர் ஆய்வு செய்தனர். அப்போது தடை செய்யப்பட்ட 200 கிலோ பிளாஸ்டிக் கவர் மற்றும் பிளாஸ்டிக், பொருட்களை பறிமுதல் செய்தனர்.