உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / டிராக்டர் கவிழ்ந்து விபத்து 22 பெண்கள் காயம்

டிராக்டர் கவிழ்ந்து விபத்து 22 பெண்கள் காயம்

அரக்கோணம்:ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அடுத்துள்ளது முதுார் கிராமம். இங்கு விவசாயம் பெரும்பான்மையான தொழிலாக உள்ளது.அதே கிராமத்தில் உள்ள விவசாய நிலத்தில் பணிக்காக, 22 பெண்கள் நேற்று காலை டிராக்டரில் சென்றனர். அரக்கோணம் --- கோணலம் நெடுஞ்சாலையில் சென்ற டிராக்டர் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த சாலை ஓரம் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.இதில் டிராக்டரில் பயணம் செய்த விவசாய பணிக்கு சென்ற 22 பெண்கள் காயமடைந்தனர். அவர்கள் அரக்கோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர்.அரக்கோணம் தாலுகா போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை