உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / ஹெல்மெட் அணியாமல் அத்துமீறல் 23 நாட்களில் 2,330 வழக்குகள் பதிவு

ஹெல்மெட் அணியாமல் அத்துமீறல் 23 நாட்களில் 2,330 வழக்குகள் பதிவு

ஊத்துக்கோட்டை:தமிழகத்தில் இருசக்கர வாகனங்களில் செல்வோரில் பெரும்பாலானோர் 'ஹெல்மெட்' அணியாமல் செல்கின்றனர். இதனால், இவர்கள் விபத்தில் சிக்கும் போது, தலையில் காயம் ஏற்பட்டால் உயிரிழக்கும் அபாயம் ஏற்படுகிறது.எனவே, இருசக்கர வாகனங்களில் செல்வோர் கட்டாயம் 'ஹெல்மெட்' அணிய வேண்டும் என, அரசு சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. ஆனால், சில வாகன ஓட்டிகள் 'ஹெல்மெட்' அணியாமல் செல்கின்றனர்.ஊத்துக்கோட்டை உட்கோட்டத்தில் ஊத்துக்கோட்டை, பெரியபாளையம், வெங்கல், பென்னலுார்பேட்டை, ஆரணி ஆகிய ஐந்து காவல் நிலையங்களில், கடந்த 1ம் தேதி முதல் நேற்று முன்தினம் வரை ஹெல்மெட் அணியாமல் செல்லும் வாகன ஓட்டிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.ஊத்துக்கோட்டையில் - 550, பெரியபாளையம் - 515, வெங்கல் - 575, பென்னலுார்பேட்டை - 260, ஆரணி - 430 என, மொத்தம் 2,330 வழக்குகள் பதியப்பட்டு உள்ளன.இதுகுறித்து காவல் துறை உயரதிகாரி கூறுகையில், 'ஹெல்மெட் அணிந்து பயணம் செய்வது பாதுகாப்பானது. இதை வலியுறுத்தி விழிப்புணர்வு நிகழ்வுகளும் நடத்தப்பட்டு வருகிறது. இதை, வாகன ஓட்டிகள் பின்பற்ற வேண்டும்' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை