உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / ரூ.29 லட்சம் தங்கப்பசை பறிமுதல்

ரூ.29 லட்சம் தங்கப்பசை பறிமுதல்

சென்னை: சென்னை சர்வதேச விமான நிலையத்தில், ஒப்பந்த பணியாளரான 37 வயதுள்ள சென்னை ஊழியர், குடியுரிமை அலுவலகம் அருகில் உள்ள கழிப்பறை தண்ணீர் தொட்டியில் இருந்து 2 பாக்கெட் தங்கப்பசையை, நேற்று எடுத்துள்ளார்.விமான நிலையத்தில் இருந்து வெளியில் வந்த அவரை, பாதுகாப்பு படை வீரர்கள் சோதனை செய்தனர். பின், அவர் மீதான சந்தேகத்தில் தனி அறையில் சோதித்தபோது, அவரது உள்ளாடையில் தங்கப்பசை இருந்தது. கடத்தப்பட்ட தங்கப்பசை 533 கிராம் இருந்தது. இதன் மதிப்பு 29 லட்சம் ரூபாய். அவற்றை பறிமுதல் படையினர், சுங்க அதிகாரிகளிடம் அவரை ஒப்படைத்தனர்.அவர்களது முதற்கட்ட விசாரணையில், சென்னை விமான நிலையத்திற்கு, துபாயில் இருந்து 'ஏர் இந்தியா' விமானத்தில் நேற்று அதிகாலை வந்த பயணி ஒருவர், தங்கப்பசையை கழிப்பறையில் வைத்திருந்ததாகவும், அதை எடுத்து வந்து திரிசூலத்தில் தந்தால் பணம் தருவதாகவும் கூறியதாகவும், பிடிபட்ட நபர் கூறியுள்ளார்.அவரது மொபைல் போன் அழைப்புகளை வைத்து, ஒப்பந்த ஊழியரிடம் பேசிய இலங்கை பயணி குறித்து விசாரணை நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

DARMHAR/ D.M.Reddy
மார் 19, 2024 02:05

தீர விசாரணைக்குப்பிறகு இலங்கைப்பயணி யார் என்று கண்டுபிடிக்கப்பட்டு தகுந்த குற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு நீதி அரசர்கள் தண்டனை வழங்க வேண்டும்


DARMHAR/ D.M.Reddy
மார் 19, 2024 01:39

சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் மீது விசாரணை செய்து கைது செய்யப்பட்டு பன்னிரண்டு ஆண்டுகள் திஹார் சிறயில் அடைக்கப்பட்டால் தான் இந்த மாதிரி குற்றவாளிகள் திருந்த வழி உண்டு.


மேலும் செய்திகள்





புதிய வீடியோ