உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / 40 கிலோ கஞ்சா பறிமுதல் பெண் உட்பட மூவர் கைது

40 கிலோ கஞ்சா பறிமுதல் பெண் உட்பட மூவர் கைது

கும்மிடிப்பூண்டி:ஆந்திர மாநிலத்தில் இருந்து கும்மிடிப்பூண்டி மார்க்கமாக, தமிழகத்திற்கு காரில் கஞ்சா கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூரில் உள்ள ஒருங்கிணைந்த சோதனை சாவடியில், சென்னை திட்டமிட்ட குற்ற நுண்ணறிவு பிரிவு போலீசார், நேற்று மாலை வாகன சோதனை நடத்தினர்.ஆந்திராவில் இருந்து சென்னை நோக்கி சென்ற 'டாடா நானோ' காரை நிறுத்தி சோதனையிட்டனர். அதில், 40 கிலோ கஞ்சா சிக்கியது. காருடன் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவின் மதிப்பு 3.20 லட்சம் ரூபாய்.காரில் பயணித்த ஒரு பெண் உட்பட மூவரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில், கும்பகோணத்தைச் சேர்ந்த பாக்கியலட்சுமி, 40, ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த சந்தோஷ் நாயக், 35, கேரள மாநிலத்தைச் சேர்ந்த மித்லா, 35, என்பது தெரியவந்தது.இதுகுறித்து, கும்மிடிப்பூண்டி கலால் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை