உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / 5.5 கிலோ கடத்தல் தங்கம் ஏர்போர்டில் பறிமுதல்

5.5 கிலோ கடத்தல் தங்கம் ஏர்போர்டில் பறிமுதல்

சென்னை:இலங்கையில் இருந்து சென்னை வரும் பயணியர் விமானத்தில் தங்கம் கடத்தி வரப்படுவதாகவும், இதற்கு விமான நிறுவன பிக்கப் வாகன டிரைவர் உதவுவதாகவும் மத்திய வருவாய் புலனாய்வுத் துறையினருக்கு தகவல் கிடைத்தது.விமான நிலைய அதிகாரிகளின் சிறப்பு அனுமதி பெற்று, மத்திய வருவாய் புலனாய்வு துறை தனிப்படை அதிகாரிகள் ஓடுபாதையில் காத்திருந்தனர்.நேற்று அதிகாலை 4:20 மணிக்கு விமானம் தரை இறங்கியது. பிக்கப் வாகனத்தை இயக்கும் டிரைவர் ராஜ்குமார், 35, என்பவர் இரண்டு பயணியரின் சிறிய பைகளை எடுத்து பத்திரப்படுத்தினார். கண்காணித்த அதிகாரிகள், இரண்டு பைகளையும் எடுத்து சோதித்தனர். அதனுள் 5.5 கிலோ தங்கம் இருந்தது. அதன் சர்வதேச மதிப்பு 3.3 கோடி ரூபாய். அவற்றை பறிமுதல் செய்து, டிரைவர் ராஜ்குமாரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி