உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் /  600 லிட்டர் சாராயம் பறிமுதல்

 600 லிட்டர் சாராயம் பறிமுதல்

திருவாலங்காடு: தமிழக -- ஆந்திர எல்லையில் நல்லாட்டூர், என்.என்.கண்டிகை, சிவாடா, அரும்பாக்கம், நெமிலி, பூனிமாங்காடு உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்கள் வழியாக தமிழகத்திற்கு சாராயம், கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் அதிக அளவில் கடத்தி வரப்படுவதாக ஏராள மான புகார்கள் வந்துள்ளன. எஸ்.பி., விவேகானந்த சுக்லா உத்தரவுபடி மதுவிலக்கு அமலாக்க பிரிவு டி.எஸ்.பி., கந்தன் தலைமையில் போலீசார் நேற்று அரும்பாக்கம் அருகில் உள்ள ஏரியில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது மூன்று பேரல்களில் இருந்த 600 லிட்டர் சாராய ஊரல்களை போலீசார் கண்டுபிடித்து அழித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்