மேலும் செய்திகள்
குட்கா பறிமுதல்
13-Jan-2025
ஊத்துக்கோட்டை:ஊத்துக்கோட்டை அருகே, தாமரைக்குப்பம் கிராமத்தில் பணம் வைத்து சூதாட்டம் நடப்பதாக, ஊத்துக்கோட்டை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதையடுத்து, போலீசார் அப்பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.தாமரைக்குப்பம் காட்டுப்பகுதியில் சூதாட்டம் நடந்தது தெரிந்து போலீசார் அப்பகுதிக்கு சென்றபோது, அங்கிருந்த சிலர் ஓட்டம் பிடித்தனர். போலீசார் துரத்திச் சென்று பிடித்து விசாரித்தனர்.விசாரணையில் அவர்கள் போந்தவாக்கம் பழைய காலனி அமாவாசை, 54, ஊத்துக்கோட்டை ராஜா, 40, ஆம்பாக்கம் மது, 52, ஆகியோர் என்பது தெரியவந்தது.மேலும், தப்பியோடிய நான்கு பேரை போலீசார் தேடி வருகின்றனர்.அவர்களிடம் இருந்து, ஒன்பது செட் சீட்டுக்கட்டு, 56 ஆயிரம் ரூபாய், ஐந்து டூ - வீலர்கள், ஐந்து மொபைல்போன்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
13-Jan-2025