உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / 71 மாடுகளால் களைகட்டிய பந்தயம்

71 மாடுகளால் களைகட்டிய பந்தயம்

செங்குன்றம்: சென்னை, புழல் அடுத்த வடபெரும்பாக்கத்தில், சென்னை வடகிழக்கு மாவட்ட, மாதவரம் வடக்கு பகுதி தி.மு.க., சார்பில், முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.அதற்காக, 4 கிலோ மீட்டர் மற்றும் 8 கிலோ மீட்டர் என, இரு பிரிவாக, ஒற்றை மாட்டு வண்டி பந்தயம், நேற்று காலை, முறையே கண்ணம்பாளையம் முதல், பெரியார் நகர் சந்திப்பு வரை; காந்தி நகர் முதல், அரியலுார் சந்திப்பு வரை நடந்தது.அதில், திருச்சி, மதுரை, கோவை, செங்கல்பட்டு மாவட்டங்களில் கொண்டு வரப்பட்ட, 71 மாடுகள் போட்டியிட்டன. வெற்றி பெற்ற மாட்டு வண்டி வீரர்களுக்கு, அந்த பகுதி தி.மு.க., நிர்வாகிகள், கோப்பைகளை பரிசாக வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி