உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் /  ரூ.2 லட்சத்தில் சீரமைத்தும் திறக்கப்படாத சுகாதார வளாகம்

 ரூ.2 லட்சத்தில் சீரமைத்தும் திறக்கப்படாத சுகாதார வளாகம்

பள்ளிப்பட்டு: சுகாதார வளாகம், 2 லட்சம் ரூபாயில் சீரமைக்கப்பட்டும், திறக்கப்படாமல் பூட்டியே கிடப்பதால், கர்லம்பாக்கம் கிராம மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். பள்ளிப்பட்டு ஒன்றியம், கர்லம்பாக்கம் கிராமத்தில் சுகாதார வளாகம் கட்டப்பட்டுள்ளது. இந்த வளாகம், ஐந்து ஆண்டுகளாக யாரும் பயன்படுத்தாமல் சீரழிந்து கிடந்தது. சமீபத்தில், 2 லட்சம் ரூபாயில் சீரமைக்கப்பட்டது. ஆனாலும், பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படாமல் தொடர்ந்து பூட்டியே கிடக்கிறது. மேலும், இந்த சுகாதார வளாகம், ஏரிக்கரையை ஒட்டி பள்ளமான பகுதியில் அமைந்துள்ளதால், இந்த வளாகத்தை சுற்றிலும் மழைநீர் தேங்கி நிற்கிறது . எனவே, சுகாதார வளாகத்தை மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ