மேலும் செய்திகள்
சேதமடைந்த நெடுஞ்சாலை வாகன ஓட்டிகள் கடும் அவதி
41 minutes ago
வி.ஏ.ஓ., அலுவலக கட்டடம் படுமோசம்
50 minutes ago
600 லிட்டர் சாராயம் பறிமுதல்
22 hour(s) ago
கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டியில் நேற்று காலை பெய்த ஒரு மணி நேர மழைக்கு, ரெட்டம்பேடு மற்றும் ஜி.என்.டி., சாலையில் குளம் போல் தண்ணீர் தேங்கியது. கும்மிடிப்பூண்டி பகுதியில், நேற்று காலை ஒரு மணி நேரத்திற்கு கனமழை பெய்தது. இதனால், கும்மிடிப்பூண்டியில் உள்ள ஜி.என்.டி., சாலை மற்றும் ரெட்டம்பேடு சாலையில் மழைநீர் வடிந்து செல்ல வழியின்றி குளம்போல் தேங்கியது. இச்சாலைகள் வழியாக சென்ற இருசக்கர வாகன ஓட்டிகள், பள்ளி மாணவர்கள் மற்றும் பாதசாரிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். இதை தொடர்ந்து, நெடுஞ்சாலைத் துறை மற்றும் பேரூராட்சி நிர்வாகம் இணைந்து, மழைநீர் வடிந்து செல்ல வழி ஏற்படுத்தியது.
41 minutes ago
50 minutes ago
22 hour(s) ago