உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / பாலத்தில் வளரும் செடியால் உறுதித்தன்மை பாதிக்கும் அவலம்

பாலத்தில் வளரும் செடியால் உறுதித்தன்மை பாதிக்கும் அவலம்

ஊத்துக்கோட்டை:திருவள்ளூர் மாவட்டத்தில், தமிழக- - ஆந்திர எல்லையில் உள்ளது ஊத்துக்கோட்டை பேரூராட்சி. திருவள்ளூரில் இருந்து சத்தியவேடு, தடா, காளஹஸ்தி, வரதயபாளையம் உள்ளிட்ட பகுதிகளுக்கு ஊத்துக்கோட்டை வழியே செல்ல வேண்டும். இதில் சத்தியவேடு சாலையில், தமிழக -- ஆந்திர எல்லையில் பாலம் உள்ளது. கடந்த, 40 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட இந்த பாலத்தின் அடிப்பகுதி பழுதடைந்து காணப்படுகிறது.பாலத்தின் இரண்டு பக்கமும் செடிகள் புதர் போல் வளர்ந்துள்ளன. இதனால் இதன் உறுதித்தன்மை மேலும் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. இந்த பாலத்தின் வழியே தினமும் ஏராளமான வாகனங்கள் செல்கின்றன. சத்தியவேட்டில் இருந்து நாகலாபுரம், பிச்சாட்டூர், நகரி, புத்துார், திருப்பதி உள்ளிட்ட இடங்களுக்குச் செல்லும் பஸ், லாரி போன்ற கனரக வாகனங்களும், ஊத்துக்கோட்டையில் உள்ள இந்த பாலத்தின் மீது தான் செல்ல வேண்டும்.இந்த பாலத்தை பராமரிக்கும் திருவள்ளூர் நெடுஞ்சாலைத் துறையினர், இதுகுறித்து எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. எனவே, மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து பாலத்தில் வளர்ந்துள்ள செடிகளை அகற்ற வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்