உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / போஸ்டர் ஒட்டும் இடமான நிழற்குடை

போஸ்டர் ஒட்டும் இடமான நிழற்குடை

திருவாலங்காடு:திருவள்ளூர் -- அரக்கோணம் மாநில நெடுஞ்சாலை, திருவாலங்காடு வட்டார வளர்ச்சி அலுவலர் அலுவலக பேருந்து நிறுத்தத்தில், 5 ஆண்டுகளுக்கு முன் பயணியர் நிழற்குடை அமைக்கப்பட்டது.பயணியர், மழை, வெயிலில் இருந்து பாதுகாப்பாக நிற்க அமைக்கப்பட்ட நிழற்குடை தற்போது போஸ்டர் ஒட்டும் இடமாக மாறி உள்ளது.மேலும், நிழற்குடை சூழ்ந்து செடிகள் வளர்ந்துள்ளதால், பேருந்துக்காக காத்திருக்கும் பயணியர் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.எனவே, பயணியர் நிழற்குடையை போஸ்டரை ஒட்டி அசுத்தம் செய்பவர்கள் மீது சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ