| ADDED : பிப் 09, 2024 09:39 PM
சோழவரம்:சோழவரம் அடுத்த தேவனேரி, எஸ்.பி.கே நகர் பகுதிகளைச் சேர்ந்தவர்கள், காரனோடை மற்றும் சோழவரம் பஜார் பகுதிக்கு சென்று வருபவர்கள் சென்னை - கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையின் குறுக்கே உள்ள சுரங்கப்பாதையை பயன்படுத்துகின்றனர்.சிறுமழை பெய்தாலும், இங்குள்ள சுரங்கப்பாதை மற்றும் அணுகு சாலைகளில் மழைநீர் குளம்போல் தேங்குகிறது. தேங்கும் மழைநீர் உடனுக்குடன் அகற்றப்படுவதில்லை. இதனால் மேற்கண்ட பகுதிகளைச் சேர்ந்த குடியிருப்புவாசிகள் மற்றும் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.தற்போது அணுகு சாலையில் பள்ளங்கள் ஏற்பட்டு போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது. பள்ளங்களை மூடுவதற்காக மண் கொட்டி குவித்து வைத்து உள்ளனர்.சில இடங்களில் கொட்டப்பட்ட, கான்கிரீட் கலவை சாலையை கரடு முரடாக மாற்றி உள்ளது. இதை கடக்கும்போது வாகன ஓட்டிகள் தடுமாற்றம் அடைகின்றனர்.மழையின்போது அணுகு சாலையில் தண்ணீர் தேங்கியதால் வாகனங்கள் செல்வதற்கு தடை ஏற்படுத்துவதற்காக சிமென்ட் கட்டுமானங்கள் ஆங்காங்கே வைக்கப்பட்டுள்ளன. அவை இதுவரை அகற்றப்படாமல் வாகனங்கள் சென்று வருவதற்கு இடையூறாக உள்ளது.மேற்கண்ட அணுகு சாலையை முழுமையாக சீரமைக்கவும், மழைக்காலங்களில் மழைநீர் செல்வதற்கு சரியான வடிகால்வாய் அமைக்கவும் வேண்டும் என வாகன ஓட்டிகள் மற்றும் குடியிருப்புவாசிகள் எதிர்பார்க்கின்றனர்.