நிழற்குடை இல்லாத நிறுத்தம் பேருந்து பயணியர் அவஸ்தை
கடம்பத்துார்:திருப்பாச்சூர் - கொண்டஞ்சேரி நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது கடம்பத்துர். இப்பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி, பெண்கள் உயர்நிலைப் பள்ளி, துவக்கப்பள்ளி எதிரே பேருந்து நிறுத்தம் உள்ளது.இந்த பேருந்து நிறுத்தத்தை பயன்படுத்தி அரசு பள்ளி மாணவர்கள் மற்றும் பகுதிவாசிகள் பேரம்பாக்கம், தக்கோலம், மப்பேடு, காஞ்சிபுரம் சென்று வருகின்றனர்.இந்நிலையில், பேருந்து நிறுத்தத்தில் நிழற்குடை இல்லாததால், பயணியர் மற்றும் பள்ளி மாணவ - மாணவியர் வெயிலிலும், மழையிலும் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.எனவே, சம்பந்தப்பட்ட ஒன்றிய நிர்வாகத்தினர் பேருந்து நிறுத்தத்தில் நிழற்குடை அமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென, பயணியர் மற்றும் மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.