மேலும் செய்திகள்
தீ பற்றி எரிந்த கார்
21-Mar-2025
திருத்தணி:ஆந்திர மாநிலம் சித்துார் மாவட்டம், சித்தம்பாரம் கிராமத்தைச் சேர்ந்தவர் பத்மநாபன், 45. இவர், நேற்று காலை 'ஈச்சர்' லாரியில் திருத்தணி ஒன்றியம், எஸ்.அக்ரஹாரம் ஊராட்சியில் உள்ள குடிகுண்டா கிராமத்திற்கு வந்தார். அங்கு, வைக்கோலை லாரியில் ஏற்றி, மாலை 5:00 மணிக்கு புறப்பட்டார். அப்போது, அக்ரஹாரம் அருகே வந்த போது, சாலையின் குறுக்கே சென்ற மின்ஒயரில் வைக்கோல் உரசியதில், தீப்பொறி ஏற்பட்டு தீப்பிடித்து எரிந்தது. தகவல் அறிந்து வந்த திருத்தணி தீயணைப்பு வீரர்கள், அரை மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.அதற்குள், வைக்கோல் மட்டும் தீயில் எரிந்தது. லாரியும், ஓட்டுநர் மற்றும் உடன் வந்த பத்மநாபன் காயமின்றி தப்பினர். திருத்தணி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
21-Mar-2025