உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / கான்கிரீட் பெயர்ந்த மின்கம்பத்தால் விபத்து அபாயம்

கான்கிரீட் பெயர்ந்த மின்கம்பத்தால் விபத்து அபாயம்

ஊத்துக்கோட்டை:ஊத்துக்கோட்டை அருகே, நந்திமங்களம் கிராமத்தில், 2,000க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இப்பகுதியினரின் முக்கிய தொழில் விவசாயம் மற்றும் கூலி வேலைக்குச் செல்வது.இங்கு அரசு தொடக்கப் பள்ளி உள்ளது. இதில் இரண்டு ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர். கிராமத்தைச் சேர்ந்த, 21 மாணவ - மாணவியர் கல்வி கற்கின்றனர். இந்த பள்ளிக்கு செல்லும் சாலையில், சமீபத்தில் புதிய மின்கம்பம் அமைக்கப்பட்டது.ஊத்துக்கோட்டை மின்வாரிய அலுவலகம் வாயிலாக அமைக்கப்பட்ட புதிய மின்கம்பம் கான்கிரீட் பெயர்ந்து, உடைந்து விழும் நிலையில் உள்ளது.எனவே, நந்திமங்களம் கிராமத்தில் அபாயகரமான நிலையில் உள்ள மின்கம்பத்தை உடனடியாக மாற்ற வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை