மேலும் செய்திகள்
சாலையில் மணல் குவியல் வாகன ஓட்டிகள் பாதிப்பு
28-Jul-2025
ஆர்.கே.பேட்டை:ஆதிவராகபுரம் கூட்டுச்சாலையில் மையத் தடுப்பு இல்லாததால், வாகன ஓட்டிகள் விபத்து அபாயத்தில் சென்று வருகின்றனர். ஆர்.கே.பேட்டையில் இருந்து சோளிங்கர் செல்லும் சாலையில், கல்பட்டு பகுதியில் இருந்து ஆதிவராகபுரம் இணைப்பு சாலை பிரிகிறது. இந்த கூட்டுச்சாலையில் நிலவும் குழப்பத்தால், வாகன ஓட்டிகள் விபத்து அபாயத்தில் தவிக்கின்றனர். ஆதிவராகபுரத்தில் இருந்து இடதுபுறமாக சோளிங்கர் செல்லவும், ஆர்.கே.பேட்டையில் இருந்து ஆதிவராகபுரத்திற்கு இடதுபுறமாக திரும்பவும் எந்தவித சிக்கலும் இல்லை. ஆனால், சோளிங்கரில் இருந்து ஆதிவராகபுரம் செல்லவும், ஆதிவராகபுரத்தில் இருந்து ஆர்.கே.பேட்டை செல்லவும் சாலையை எதிர்புறமாக கடக்க வேண்டிய நிலை உள்ளது. அவ்வாறு கடக்கும் போது, மாநில நெடுஞ்சாலையில் வேகமாக பயணிக்கும் வாகனங்களால் விபத்து ஏற்படுகிறது. எனவே, ஆதிவராகபுரம் கூட்டுச்சாலைக்கு எதிரே, ஏரிக்கரையையொட்டி சர்வீஸ் சாலை ஏற்படுத்தவும், சாலையின் நடுவே மையத்தடுப்பு அமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
28-Jul-2025