மேலும் செய்திகள்
கடத்தல்காரர்களிடம் இருந்து தப்பியவர் போலீசில் புகார்
8 minutes ago
வருவாய் மாவட்ட கால்பந்து அம்பத்துார் அரசு பள்ளி வெற்றி
8 minutes ago
பஞ்செட்டியில் பாலம் சேதம்: வாகன ஓட்டிகள் தடுமாற்றம்
10 minutes ago
பொன்னேரி: விவசாயிகளுக்கு தேவையான யூரியா, டி.ஏ.பி., பொட்டாஷ் உள்ளிட்டவைகளை, தனியார் மற்றும் கூட்டுறவு விற்பனை நிலையங்களில் இருப்பு வைத்து விற்பனை செய்ய வேண்டும். மேலும், கூடுதலான இணை பொருட்களை வாங்க கட்டாயப்படுத்தி அலைக்கழித்தால், உரிமம் ரத்து செய்யப்படும் என, வேளாண் துறை எச்சரித்துள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில், சம்பா பருவத்திற்கு, 1.20 லட்சம் ஏக்கரில் நெல் பயிரிடப்பட்டு உள்ளது. நெற்பயிர்களின் சீரான வளர்ச்சிக்கு யூரியா, பொட்டாஷ் உள்ளிட்ட உரங்களை அவ்வப்போது தெளிக்க வேண்டும். விவசாயிகளுக்கு தேவையான உரங்கள், மாவட்டத்தில் உள்ள 207 தனியார் விற்பனை நிலையங்கள், 114 தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த தனியார் விற்பனை நிலையங்களில், விவசாய இடுபொருட்கள் சரிவர விற்பனை செய்யப்படுவதில்லை. மேலும், குறிப்பிட்ட உரத்தை வாங்கும்போது, தேவையில்லாத இணை பொருட்களை கட்டாயம் வாங்க வேண்டும் என, விவசாயிகளை வற்புறுத்துகின்றனர். விவசாயிகளிடம் இருந்து வந்த புகார்களின் அடிப்படையில், வேளாண் துறையினர் தொடர் ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர். இது தொடர்பாக, மாவட்ட வேளாண் துறை இணை இயக்குநர் பால்ராஜ் கூறியதாவது: அனைத்து வகை உரங்களும் தனியார் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. விற்பனை நிலையங்களில், உர விற்பனையை முறைப்படுத்தவும், விபரங்களை பி.ஓ.எஸ்., மூலம் பட்டியல் வழங்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அவற்றை தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறோம். இதுவரை குறைபாடு உள்ள இரண்டு தனியார் கடைகளுக்கு விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டு உள்ளது. நான்கு உரக்கடைகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. முறையாக இருப்பு வைத்து, விற்பனை மேற்கொள்ளாத அல்லது பி.ஓ.எஸ்., கருவி வாயிலாக பட்டியல் வழங்காத தனியார் மற்றும் கூட்டுறவு விற்பனை நிலையங்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பதுடன், உர விற்பனை உரிமம் ரத்து செய்யப்படும். விவசாயிகள் கேட்கும் உரங்களை மட்டுமே வழங்க வேண்டும். உரங்களுடன் இணை பொருட்களை சேர்த்து விற்பனை செய்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
8 minutes ago
8 minutes ago
10 minutes ago