உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / பராமரிப்பில்லாத நிழற்குடை : பார் ஆக மாறி வரும் அவலம்

பராமரிப்பில்லாத நிழற்குடை : பார் ஆக மாறி வரும் அவலம்

கடம்பத்துார்: கடம்பத்துார் ஒன்றியத்துக்குட்பட்டது பாப்பரம்பாக்கம் ஊராட்சி. இங்கிருந்து மண்ணுார் செல்லும் சாலையில், போளிவாக்கம் கிராமம் செல்லும் சாலை சந்திப்பில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக நிழற்குடை அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிழற்குடையை பயன்படுத்தி பகுதிவாசிகள் போளிவாக்கம், ஸ்ரீபெரும்புதுார், பூந்தமல்லி, திருவள்ளூர் மார்க்காக சென்று வருகின்றனர். இந்த நிழற்குடை கடந்த மூன்று ஆண்டுகளாக எவ்வித பராமரிப்பும் இல்லாததால் சேதமடைந்து, புதர் மண்டிக் கிடக்கிறது. இதனால் இந்த நிழற்குடையை 'குடி' மகன்கள் மது அருந்தும் இடமாக மாற்றி விட்டனர். இதனால் இந்த நிழற்குடையை பயன்படுத்த முடியாமல் பயணியர் அவதிப்பட்டு வருகின்றனர். நிழற்குடையை சீரமைக்க பலமுறை புகார் அளித்தும் ஊராட்சி நிர்வாகம் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என பகுதிவாசிகள் குற்றம் சாட்டுகின்றனர்.எனவே, சம்பந்தப்பட்ட ஒன்றிய அதிகாரிகள் நிழற்குடையை சீரமைத்து மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டுமென பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்